Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::  . -
5>&'5$ , 5'$
 4

CAT on the WALL: December 2006

Saturday, December 30, 2006

கொடுங்கோலன் மேல் உனக்கென்ன கவலை?


நீதிமன்றம் பேரில் நிறைவேற்றப்பட்ட சதாமுடைய கொலை பற்றி இங்கு எழுதும் பலரும் முஸ்லிம், இடதுசாரி, ஜன்ரஞ்சக, ஏழை, ஈழ, உட்பட மிகிதமானோர் அவருடைய குற்றங்கள் பற்றி மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

தனிநிலை பாதுகாக்கப்பட்ட, ஏகாதிபத்திய பின்புலன் இல்லாத, இறையான்மை கொள்கைகளை தாங்கிகளாக கொண்டியங்கும் மன்றத்தால் விசாரிக்கப்பட்டு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் கொண்டோர்களின் விருப்பம்.

எழுப்படும் கேள்வி என்னவென்றால்,
இந்த 'விருப்பத்தை' ஒரு noble appeal ஐ தன்னுடைய தனிப்பெரும் சுயநலத்துக்காக - ஒரு ஏகாதிபத்திய சக்தி ( சர்வதேச பிரச்சினைகளில் சுயநல அடிப்படையில் பலநிலைப்பாடுகள் கொண்ட சுயநலதேச சக்தி) பகடைக்காயாக பயன்படுத்தி, தன்னுடைய கோரமுகத்தை இதன் பின்னால் ஒளித்துக்கொண்டு வன்முறை அடக்குமுறை கொள்ளை ஆணவம் போன்ற கொள்கைகளை சத்தமில்லாமல் பரப்புகிறதே... இதனை அனுமதிக்கலாமா? என்பதே.


இந்த நிகழ்வில் தமிழ்மணம் ஊடாக மேலும் எழும் கேள்விகள்:

1. இதே ஏகாதிபத்திய சக்தி, கொடூர கொலை கற்பழிப்புகளை நடத்தியதன் காரணம் காட்டி, இனப்படுகொலைகாரன் நரேந்திரமோடிக்கு நுழைவு மறுத்த போது - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அன்றைக்கு, சார்பு ஊடகங்கள் மூலம், இந்தியா அவமானப்படுத்தப்பட்டதாக பிரச்சாரம் செய்தார்கள்.இதுதான் பேச நா இரண்டுடையார் போற்றி என்பதா?

2. எத்தனையோ செய்திகள் மூலம், உலகின் பல்வேறு கொடூரங்களுக்கு மூலகுசும்பன் 'பெரியரக்கன்' (காட் ப்லெஸ் பெரியரக்கன்) என காண்பித்தும், - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அதை பற்றி பகல் நோன்பு வைத்திருக்கிறார்கள். ஒருவேளை 'உயிர்களை கொல்வது பாவம் - அவை சிறியளவில் இருக்கும் வரை' என்ற புதுக் கருத்தை தாங்கள் நம்பும் இறைக் கொள்கைகள் புதிதாக சுவீரகரித்து கொண்டதாலா?

3. கார்டூன் மூலம் குசும்பு செய்து பின் எழுந்த ஆர்ப்பாட்ட நிலைக்கு ஆத்திரச் சாயம் பூசிய - நாகரீகமிக்க அடுத்தவர் நாகரீகம் மதிக்கும், அப்பாவியுமான 'உலக சமாதான தூதுவன்' (பொதுவாக, இவர் புகுந்த இடம் உருப்படாது) - ஈராக்கிய மக்கள் 'தியாகத் திருநாளில்' எழும்போது அதை 'வன்முறைத் திருநாளாக' வாழ்நாலெல்லாம் நினைக்கும்படி ஒரு ஏற்பாட்டை கார்டூன் கணக்காக செய்திருக்கிறது. இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', இதையும் கார்டுனிற்கு பல்லை காமிப்பதுதான் நாகரீகம் என்று அன்று பாடம் சொன்னது போல, இன்று இந்த சம்பவத்தை 'வந்து எங்களை காத்தாய் வடிவேலா!!' என இருகரம் சேவித்துக் கொண்டாடவேண்டுமென பாடம் சொல்வது ஏன்?

ஒருவேளை, மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் என்பது பேசும் விஷயத்தை பொருத்ததா?

காட் ப்லெஸ் ஆல்